Tamil Current Affairs
உலக செய்திகள்
- பெரு நாட்டின் புதிய பிரதமராக மார்டின் விஸ்காரா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்
- இலங்கை மற்றும் நேபாளம் இடையே இரு மின் உற்பத்தி திட்டங்களை சார்க் வளர்ச்சி நிதியம் ரூ.194 கோடி நிதி உதவி அளித்துள்ளது
- இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இலங்கைகான 2வது போர் கப்பல் இலங்கை கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டது
- சட்ட மேதை பாபாசகிப் அம்பேத்கர் பிறந்த நாளான ஏப்ரல்14ஐ சமூக நீதி தினமாக மத்திய அரசு அறிவித்துள்ளது
- டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் பேஸ்புக் பக்கங்களை, அதன் சிஇஓ எலன் மஸ்க், நீக்கியுள்ளார்.
- அமெரிக்க அதிபர் ட்ரம்பின் புதிய உத்தரவால் ராணுவத்தில் திருநங்கைகள் பணிபுரிவதில் தடை ஏற்பட்டுள்ளது.
தேசிய செய்திகள்
- பீகார் மாநிலத்தில் 17,685பேருக்கு ஒரு மருத்துவர் என்கிற விகிதத்தில்
மருத்துவர்கள் உள்ளதாக அந்த மாநில சுகாதாரத்துறை அமைச்சர் மங்கள் பாண்டே
தெரிவித்துள்ளார்.
- பூசண் ஸ்டீல் நிறுவனத்தை 35ஆயிரம் கோடி ரூபாய்க்கு டாட்டா ஸ்டீல் வாங்கியுள்ளது.
- நாடு முழுவதும் நாள்தோறும் குவியும் மருத்துவக் கழிவுகளின் அளவு வரும்
2022 ஆம் ஆண்டிற்குள்5 டன்னாக அதிகரிக்கும் என அகில இந்திய வர்த்தக மற்றும்
தொழில்துறை கூட்டமைப்பான அசோசம் (ASSOCHAM) எச்சரித்துள்ளது.
- தமிழகம் காசநோயால் பாதித்தவர்களுக்கு சிகிச்சை காலம் முழுவதும் ரூ.500 உதவித்தொகை வழங்கவுள்ளது.
- குஜராத்தில் உள்ள தீசா என்ற இடத்தில் புதிய விமானப்படை தளம் உருவாக்கப்படவுள்ளது
வர்த்தக செய்திகள்
- நாட்டின் தொலைத்தொடர்பு வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை ஜனவரி மாதத்தில்5 கோடி சரிவடைந்துள்ளது
- டிராக்டர்ஸ் அண்டஃபாரம் எக்கியூப்மெண்ட் நிறுவனம்( டாஃபே) 2018ம்
ஆண்டிற்கான ப்ராஸ்ட்&சுல்லிவனின் சர்வதேச தயாரிப்பு தலைமை விருதினை
பெற்றுள்ளது
- எலக்ட்ரானிக் கார் தயாரிப்பாகற்காக போர்ட் கார் மற்றும் மஹிந்திரா கார் நிறுவனம் இடையே ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது
விளையாட்டு செய்திகள்
- ஸ்பெயினில் நடைபெற்ற சைக்கிள் பந்தயத்தில், கொலம்பிய வீரர் வியல்ஹா (veilha) வெற்றிப் பெற்றார்.
- ஆஸ்திரேலியாவில் அடுத்த மாதம் நடைபெற உள்ள காமன்வெல்த் விளையாட்டுப்
போட்டித் தொடக்கவிழாவில் பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து இந்திய
அணிக்குக் கொடியேந்தித் தலைமையேற்றுச் செல்லவிருக்கிறார்.
- மியாமி டென்னிஸ் போட்டியில் ஹாலெப், யுகி பாம்ப்ரி வெற்றி பெற்றனர்.
- ஜூனியர் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதலில் டிராப் பிரிவில் இந்திய வீரர் விவான் கபூர் வெண்கலப் பதக்கம் வென்றார்.
- உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாட ஆப்கானிஸ்தான் அணி தகுதி பெற்றது.
முக்கிய தினங்கள்
- மார்ச் 24- உலக காசநோய் தினம் , சர்வதேச சாதனையாளர்கள் தினம்
0 comments:
Post a Comment