நடப்பு நிகழ்வுகள் பிப்ரவரி 08, 2019
உலக செய்திகள்
- மாசிடோனிய நேட்டோ இராணுவ கூட்டமைப்பில் 30 வது நாடாக இணைந்துள்ளது
- திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய எரிவாயு (LPG) பயன்பாட்டில் உலகின் இரண்டாவது பெரிய நுகர்வோர் மற்றும் இறக்குமதியாளராக இந்தியா திகழ்கிறது. மேலும் சீனா முதலிடத்தில் உள்ளது
தேசிய செய்திகள்
- அசாம் மாநிலம் கௌகாதியில் இரண்டாவது “ஆசியான் – இந்தியா இளைஞர் மாநாட்டை” அம்மாநில முதல்வர் ‘சர்பானந்த சோனோவால்’ தொடங்கி வைத்தார். இம்மாநாட்டின் நோக்கம் "இணைப்பை பகிர்ந்துகொள்வதற்கான செம்மையான பாதை" ஆகும்.
- பிரதான் மந்திரி பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 2016 – 17 ஆண்டில் அதிக காப்பீட்டுத் தொகை பெற்ற மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. இத்திட்டத்தின் கீழ் காரிப் பயிர்களுக்கு – 2 சதவிகிதமும், ராபி பயிர்களுக்கு 1.5 சதவிகிதமும் காப்பீட்டுத் தொகையாக வழங்கப்படுகிறது.
- அதிக அளவு வெப்பம் பதிவான ஆண்டுகளின் பட்டியலில் 2018ஆம் ஆண்டு 4-வது இடத்தை பிடித்துள்ளது.
- ஆந்திராவில் காபு சமூகத்துக்கு 5 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மசோதா அம்மாநில சட்டமன்றத்தில் நிறைவேறியுள்ளது.
- சென்னையில் உள்ள ஒருங்கிணைந்த இரயில் பெட்டி தொழிற்சாலையின் பொது மேலாளராக (ICF General Manager) “இராகுல் ஜெயின்” நியமிக்கப்பட்டுள்ளார்.
- பிரதான் மந்திரி பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 2016 – 17 ஆண்டில் அதிக காப்பீட்டுத் தொகை பெற்றதில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது.
விளையாட்டு செய்திகள்
- உலகக் கோப்பையில் பங்கேற்கவுள்ள ஆஸ்திரேலிய அணிக்கு, துணை பயிற்சியாளராக ரிக்கி பாண்டிங் நியமிக்கப்பட்டுள்ளார்.
- டி-20 போட்டிகளில் அதிக ரன்களைக் குவித்தவர் என்னும் சாதனையை இந்திய அணி வீரர் ரோகித் சர்மா நிகழ்த்தியுள்ளார். இவர் நியூசிலாந்து அணியின் மார்ட்டின் கப்திலின் சாதனையை முறியடித்து முதல் இடத்தை பெற்றுள்ளார்.