நடப்பு நிகழ்வுகள் பிப்ரவரி 12, 2019
உலக செய்திகள்
- கனடாவின் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்தால் வழங்கப்படும் வாழ்நாள் சாதனையாளர் விருதுக்கு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கனட திரைப்படத் தயாரிப்பாளர் தீபா மேத்தா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
தேசிய செய்திகள்
- அரியானாவில் ரூ.2,035 கோடியில் தேசிய புற்றுநோய் மையத்தினை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்
- தேஜாஸ் எம்கே1 என்ற இலகு ரக போர் விமானங்களை இயக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதால், இந்திய விமானப்படையில் கூடுதலாக 4 தேஜாஸ் விமானங்கள் சேர்க்கப்பட உள்ளன. பொதுத்துறை நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோநாட்டில்ஸ் லிமிடெட், தேஜாஸ் போர் விமானங்களை தயாரித்து வருகிறது.
- பூட்டான் நாட்டுக்கான இந்தியத் தூதராக ருச்சிரா கம்போஜ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
- நாட்டில் ஒட்டுமொத்தமாக சரக்கு மற்றும் சேவை வரி வசூலித்தலில் தமிழ்நாடு 4வது இடத்தைப் பிடித்துள்ளது. மேலும் மஹாராஷ்ட்ரா முதலிடத்திலும் உத்திரப் பிரதேசம் இரண்டாம் இடத்திலும் உள்ளது
- ஆந்திரப் பிரதேச மாநில அரசானது விவசாயிகளுக்கு நிதியுதவி அளிப்பதற்காக ‘அன்னதத்தா சுஹிபாவா’ (Annadata Sukhibhava Scheme) என்ற திட்டத்தைத் தொடங்கியுள்ளது.
- சமுதாயத்தில் மிகவும் பின்தங்கிய பெண்களிடையே புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் அந்நோயின் ஆரம்பகால நிலை பற்றிய அறிதலை ஏற்படுத்தவும் “சுவஸ்த் நாரி – சக்தி ஹமாரி” என்ற பிரச்சாரத்தை இந்திய புற்றுநோய் சமூகம் (Indian Cancer Society – ICS) தொடங்கியுள்ளது.
- தைவானின் புதிய பிரதமராக சூ செங் - சங்(Su Tseng-chang) நியமிக்கப்பட்டுள்ளார்
- இந்திய நாட்டின் கடவுச்சீட்டை(Passport) பயன்படுத்தி ஒருவர் 61 நாடுகளுக்கு நுழைவு இசைவு இல்லாமல்(Visa) பயணம் செய்ய இயலும்.இப்பட்டியலில் ஜப்பான் முதலிடத்திலும் சிங்கப்பூர் மற்றும் தென்கொரியா ஆகிய நாடுகள் இரண்டாவது இடத்திலும் பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள் மூன்றாவது இடத்திலும் உள்ளன.
- மூத்த இந்தியக் காவல் பணி அதிகாரியான ஏ.பி. மகேஸ்வரி மத்திய உள்துறை அமைச்சகத்தின் சிறப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
வர்த்தக செய்திகள்
- அமெரிக்க நிறுவனமான சிக் சாயர் நிறுவனத்துடன் இந்திய ராணுவம் 72,400 SIG 716 வகை நவீன ரக துப்பாக்கிகள் வாங்குவதற்க்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது
விளையாட்டு செய்திகள்
- சர்வதேச குத்துச்சண்டை சங்கம் வெளியிட்டுள்ள உலக குத்துச்சண்டை தரவரிசைப் பட்டியலில், 45 – 48 கி.கி., ‘Light fly’ ’ பிரிவில் இந்திய குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் முதலிடம் பிடித்துள்ளார்.
- பூடான் நாட்டில் அண்மையில் நடைபெற்ற தெற்காசிய அளவிலான பூப்பந்தாட்ட போட்டியில் இந்தியா சார்பில் விளையாடிய புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த வீரர் எம்.ஜனகன் தங்கம் வென்றார்.
- உலக டென்னிஸ் வீரர்-வீராங்கனைகளின் தரவரிசைப்பட்டியலில் ஆண்கள் ஒற்றையர் தரவரிசையில் செர்பியா வீரர் ஜோகோவிச், ஸ்பெயின் வீரர் ரபெல் நடால், ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் ஆகியோர் முறையே முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளனர். மேலும் இந்திய வீரரான பிரஜ்னேஷ் குணேஸ்வரன் 97-வது இடத்தை பிடித்துள்ளார்.பெண்கள் ஒற்றையர் பிரிவில் ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா, செக் குடியரசு வீராங் கனை கிவிடோவா மற்றும் ருமேனியா வீராங்கனை சிமோனா ஹாலெப் ஆகியோர் முறையே முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளனர்