நடப்பு நிகழ்வுகள் பிப்ரவரி 10, 2019
உலக செய்திகள்- ஐக்கிய அரபு அமீரகத்தில் நீதிமன்ற அலுவல் மொழியாக இந்தியும் சேர்க்கப்பட்டுள்ளது. மேலும் ஐக்கிய அரபு அமீரகத்தில் 26 லட்சம் இந்தியர்கள் தங்கி பணிபுரிந்து வருகின்றனர். அந்நாட்டின் மக்கள் தொகையில் 30 விழுக்காட்டினர் இந்தியர்கள் ஆவர்.
தேசிய செய்திகள்
- அசாம் மாநில அரசு ஏழை எளிய பெண்களின் திருமணத்திற்கு தங்கம் வழங்குவதற்க்காக "அருந்ததி" என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
- வர்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சர் சுரேஷ் பிரபு மும்பையில் ஹிர்கானி மஹாராஷ்டி மற்றும் மாவட்ட வர்த்தகத் திட்டம் ஆகிய இரண்டு திட்டங்களையும் அறிமுகப்படுத்தினார்
- பன்னாட்டு கடல்சார் பயிற்சியானா 'AMAN-19' பாக்கிஸ்தான் கடற்படை கட்டும் தளமான கராச்சியில் தொடங்கப்பட்டது. இதில் 46 நாடுகள் பங்குபெற்றன.
- 2020ஆம் ஆண்டில் குஜராத்தில் நடைபெறவிருக்கும் குடியேற்ற இனங்களின் பாதுகாப்பு பற்றிய ஐ.நா-வின் 13 வது மாநாட்டில் (COP) கிரேட் இந்திய புஸ்டார்ட்டை அம்மாநாட்டிற்கான சின்னமாக அறிவித்துள்ளது.
- அமெரிக்க வர்த்தக குழு (US Chamber of Commerce) வெளியிட்டுள்ள சர்வதேச அறிவுசார் சொத்து குறியீடு பட்டியல் – 2019ல் (Intellectual Property Index) இந்தியாவானது 36வது இடம் பிடித்துள்ளது. மேலும் அமெரிக்க முதலிடத்திலும் ஐக்கிய ராஜ்யம்(UK) இரண்டாம் இடத்திலும் உள்ளது
- “இலண்டன் நகரத்தின் சுதந்திரம்”(Freedom of London) என்ற விருதை இந்தியா மற்றும் ஐக்கிய இராஜ்ஜியத்திற்கு (UK) இடையேயான உறவை மேம்படுத்துவதற்கு உதவியதற்காக எஸ்பிஐ வங்கியின் ஐக்கிய இராஜ்ஜியத்தில் உள்ள தலைமையக வங்கிக்கு வழங்கப்பட்டது
- சிறுபான்மையினர் நல ஆணைய அமைச்சகத்தின் புதிய செயலாளராக ஸ்ரீ சைலேஷ் (Sri Sailesh) நியமிக்கப்பட்டுள்ளார்.
- தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவராக ஐ.ஏ.எஸ். அதிகாரி ஞானதேசிகன் நியமிக்கப்பட்டார். மேல்முறையீட்டு நிர்வாக உறுப்பினராக லீனா நாயர் நியமிக்கப்பட்டுள்ளார்.
விளையாட்டு செய்திகள்
- தாய்லாந்தில் நடைபெற்ற இகாட் கோப்பைக்கான சர்வதேச பளுதூக்குதல் போட்டியில் மீராபாய் சானு (இந்தியா) 48 கிலோ எடைப் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றார்.