உலக செய்திகள்
- ஐ.நா துணை அமைப்புக்கு உறுப்பு நாடுகளை தேர்வு செய்ய நடந்த தேர்தலில்
இந்தியா மற்ற நாடுகளை விட அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளது.
- இந்தியா மற்றும் ஸ்வீடன் இரு நாடுகளுக்கு இடையே இராணுவம் மற்றும்
தொழில் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சில முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து
போடப்பட்டு உள்ளது.
- சீனா அரசு அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சோளத்திற்கு 179 சதவீதம் வரி விதித்துள்ளது.
- சிரியாவில் நடந்த ரசாயன தாக்குதல் தொடர்பாக விசாரணை நடத்த ரஷ்யா அரசு சர்வதேச ஆய்வு குழுவுக்கு அனுமதி அளித்துள்ளது.
தேசிய செய்திகள்
- மருந்து மற்றும் ஆரோக்கிய பராமரிப்பு துறை நாட்டில் அதிக ஊதியம் வழங்கும் துறைகளில் முதல் இடத்தில் உள்ளது.
- மத்திய அரசு இரு மாநிலங்களுக்கு இடையே உள்ள நதிநீர் பிரச்சினையை தீர்க்க ஒரே தீர்ப்பாயம் அமைக்க முடிவு செய்துள்ளது.
- கர்நாடக மாநிலத்தில் ஆதிமுக வில் எம்.பி யுவராஜ் செயலாளராகவும் எஸ்.டி குமார் துணை செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
- கடந்த 70 ஆண்டுகளாக ஒரிசா மாநிலத்தில் உள்ள போலிஸார் புறா மூலம்
தூதுவிடுவது செய்திகள் அனுப்புவது போன்ற பாரம்பரிய முறையை பின்பற்றி
வருகின்றனர். புறாக்களை பாதுகாக்க தனிபிரிவு போலீஸ் அமைப்பு உள்ளது.
வர்த்தக செய்திகள்
- ட்ராய் நிறுவனம் செல்போன் பேக்கேஜ்களை ஒப்பிட்டு பார்க்க புதிய இணையதளத்தை உருவாக்கியுள்ளது.
- கடந்த ஆண்டில் தொழில் முறையீடு முன்று மடங்கு சரிந்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
- இன்போசிஸ் நிறுவனம் 10 மில்லியன் டாலர் நிதியை ஸ்பெஷல் போணஸாக ஊழியர்களுக்கு அறிவித்துள்ளது.
- புதியதாக வருமான தாக்கல் செய்பவர்கள் இணையதளம் மூலம் வரி கணக்கை
தாக்கல் செய்ய புதிய படிவத்தை (ஐ.டி.ஆர்1 ) வருமான வரித்துறை அறிமுகம்
செய்துள்ளது.
- மத்திய அரசு பண பற்றாக் குறையை நீக்க 500 ரூ நோட்டை கூடுதலாக அச்சடிக்க முடிவு செய்துள்ளது.
விளையாட்டு செய்திகள்
- வடதுருவத்தில் நடந்த மாரத்தான் போட்டியில் "அரிகிரியோஸ்" என்ற கிரீஸ் நாட்டை சேர்ந்தவர் முதல் இடம் பிடித்தார்.
- ஆஸ்திரேலியாவை சேர்த்த ஆரோன் பிஞ்ச் ஐ.பி.எல் போட்டிகளில் 7 அணிக்காக விளையாடிய வீரர் என்ற பெருமையை பெற்றார்.
- தமிழ்நாட்டில் பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான கூடைப்பந்து போட்டியில் சாம்பியன் பட்டத்தை சென்னை பல்கலைக் கழக அணி வென்றது.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
- பிளாஸ்டிக் தயாரிக்க பயன்படும் "பாலி எத்திலின் டெராபைத்லேட் " யை
அழிக்க உதவும் "இண்டேனெல்லா சகைஎன்சிஎஸ்" மூலம் பிளாஸ்டிக்கை மறு சுழற்சி
செய்யலாம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
0 comments:
Post a Comment