நடப்பு நிகழ்வுகள் பிப்ரவரி 05, 2019
உலக செய்திகள்- இளம் கலைஞர்களை பாரம்பரிய கலைக்கு அழைத்துச் செல்ல சோபன் 2019(Sopan 2019) என்ற இசை மற்றும் நடன திருவிழா புது தில்லியில் நடத்தப்பட்டது
தேசிய செய்திகள்
- ஜம்மு காஷ்மீரில் எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியானது விஜய்ப்பூர் என்னும் இடத்தில் அமையவுள்ளது. இதன் மூலம் ஆண்டிற்கு 500 மருத்துவ இடங்கள் அளிக்கப்படவுள்ளது
- செனாப் நதியில் 624 மெகா வாட் திறன் கொண்ட கரு நீர்மின் திட்டமும் , 850 மெகாவாட் திறன் கொண்ட ராட்லே (Ratle) நீர்மின் திட்டமும் காஸ்மீர் மாநிலத்தில் அமைக்கப்படவுள்ளது
- அத்தியாவசிய மருந்துகள் மற்றும் மருத்துவ சாதனங்களை அதிக விலைக்கு விற்பனை செய்வதை தடுக்க விலை கண்காணிப்பு மற்றும் ஆய்வு முறையை (price monitoring and research unit (PMRU)) கேரளா அரசு அறிமுகப்படுத்தியுள்ளது
வர்த்தக செய்திகள்
- தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் பல்லவன் மற்றும் பாண்டியன் கிராம வங்கிகள் இணைக்கப்பட்டு, “தமிழ்நாடு கிராம வங்கி” என்ற பெயரில் புதிய வங்கி உருவாக்கப்பட்டுள்ளது. இதன் தலைமையகம் சேலத்தில் அமையவுள்ளது.
- நடப்பு நிதியாண்டின், ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலத்தில், வெளிநாட்டு நேரடி முதலீடு (FDI), 11% சரிந்து 66 பில்லியன் டாலராக உள்ளது
- ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) அன்னபூர்ணா நிதி நிறுவனத்தின் 14% பங்குகளை வாங்கியது. இதன் மதிப்பு ரூ 580 கோடியாகும்
- ஃபிட்ச் குழுமம் வெளியிட்ட அறிக்கையில் நடப்பு நிதியாண்டில்(2019-20) நிதிநிலை பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6 சதவிகிதமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளது
- பி.வி. பாரதி(P V Bharathi) கார்ப்பரேஷன் வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரியாக (CEO) பொறுப்பேற்றுள்ளார்
அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
- இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு (ISRO) உருவாக்கி உள்ள 40வது தகவல் தொடர்பு செயற்கை கோளான “ஜிசாட் – 31” (GSAT – 31) ஐரோப்பிய ராக்கெட்டான “ஏரியன் – 5” (Ariane – 5, VA247) மூலம் பிரெஞ்சு கயானாவிலிருந்து விண்ணில் செலுத்தப்பட உள்ளது.
விளையாட்டு செய்திகள்
- 2019 தாய்லாந்து ஓபன் டென்னிஸ் (2019 Thailand Open Tennis) போட்டியின், மகளிர் ஒற்றையர் பிரிவில் உக்ரைன் வீராங்கனையான டயனா யாஸ்ட்ரிம்ஸ்கா (Dayana Yastremska), ஆஸ்திரேலிய வீராங்கனையான அஜ்லா டோம்ஜானோவிக் தோற்கடித்து (Ajla Tomljanovic) சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.
- அமெரிகாவில் நடைபெற்றசெட்டில் ஓபன் போட்டியில்(Seattle Open title) இந்திய ஸ்குவாஷ் வீரர் ரமிட் டான்டன்(Ramit Tandon) எகிப்தின் மொஹமட் எல் ஷெர்பினியை(Mohamed El Sherbini) தோற்கடித்து படத்தை வென்றார்