உலக செய்திகள்
- 67 வது ஆயுதப் படைகளுக்கான மருத்துவ மாநாட்டு புனேவில் (மகாராஷ்டிரா) நடைபெற்றது
- நிலம்பார் ஆச்சார்யா(Nilambar Acharya) இந்தியாவுக்கான நேபாள தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார்தேசிய செய்திகள்
- நாடு முழுவதும், பிரதான் மந்திர உஜ்ஜவாலா யோஜனா (PMUY) திட்டத்தின் கீழ், 6.23 கோடி இலவச எல்பிஜி இணைப்புகள் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
- ஆயூஷ்மான் பாரத் திட்டத்தில் ஆயூஷ் எனப்படும் ஆயுர்வேத, யோகா , யுனானி, சித்தா மற்றும் ஹோமியோபதி ஆகிய சேவைகளை ஒருங்கிணைப்பதற்காக, மாநில சுகாதார அமைச்சர்கள் மாநாடு புதுடெல்லியில் நடைபெற்றது
- கொல்கத்தாவிற்கு அருகே உள்ள மாயாபூரில்(மேற்கு வங்கம்) உலக பாரம்பரிய மையம் (WHC – World Heritage Centre, Mayapur) அமையவுள்ளது. இதில் 45 நாடுகளின் ‘ஆன்மீக முகாம்கள்’ (Spiritual Camps) அமையவுள்ளது. இந்த திட்டத்தின் மதிப்பீடு 3000 கோடி ஆகும்.
- விவசாயிகளுடைய குழந்தைகளின் கல்வியை மேம்படுத்துவதற்காக ஊக்கத் தொகை வழங்கும் திட்டமான “கலியா சக்ரவிருதி யோஜனா” (Kalia Chhatravritti Yojana) என்னும் திட்டத்தை ஒடிசா மாநில அரசு தொடங்கியுள்ளது.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
- மாணவர்கள் தங்கள் கணினி அல்லது செல்பேசி மூலம் போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சிகளையும், மாதிரி தேர்வுகளையும் மேற்கொள்ளும் வகையில் தேசிய சோதனை நிறுவனம் (National Testing Agency), “NTA Students App” என்ற புதிய மொபைல் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.
வர்த்தக செய்திகள்
- மகாராஷ்டிரா புனேயில் விவசாயிகளுக்கும் பங்குதாரர்களுக்கும் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த விவசாய ஏற்றுமதிக் கொள்கை பற்றிய முதல் நிலை விழிப்புணர்வு திட்டம் நடைபெற்றது.
விளையாட்டு செய்திகள்
- ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க நகரில் நடைபெற்ற 2019 – WTA (Women’s Tennis Association) டென்னிஸ் போட்டியில் நெதர்லாந்து வீராங்கணை கிக்கி பெர்ட்டன்ஸ் (Kiki Bertens) சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
0 comments:
Post a Comment