Government
Jobs
Apply

Today Updates

Thursday, 7 February 2019

நடப்பு நிகழ்வுகள் பிப்ரவரி 05, 2019

By

நடப்பு நிகழ்வுகள் பிப்ரவரி 05, 2019

உலக செய்திகள்
  1. இளம் கலைஞர்களை பாரம்பரிய கலைக்கு அழைத்துச் செல்ல சோபன் 2019(Sopan 2019) என்ற இசை மற்றும் நடன திருவிழா புது தில்லியில் நடத்தப்பட்டது
தேசிய செய்திகள்
  1. ஜம்மு காஷ்மீரில் எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியானது விஜய்ப்பூர் என்னும் இடத்தில் அமையவுள்ளது. இதன் மூலம் ஆண்டிற்கு 500 மருத்துவ இடங்கள் அளிக்கப்படவுள்ளது
  2. செனாப் நதியில் 624 மெகா வாட் திறன் கொண்ட கரு நீர்மின் திட்டமும் , 850 மெகாவாட் திறன் கொண்ட ராட்லே (Ratle) நீர்மின் திட்டமும் காஸ்மீர் மாநிலத்தில் அமைக்கப்படவுள்ளது
  3. அத்தியாவசிய மருந்துகள் மற்றும் மருத்துவ சாதனங்களை அதிக விலைக்கு விற்பனை செய்வதை தடுக்க விலை கண்காணிப்பு மற்றும் ஆய்வு முறையை (price monitoring and research unit (PMRU)) கேரளா அரசு அறிமுகப்படுத்தியுள்ளது
வர்த்தக செய்திகள்
  1. தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் பல்லவன் மற்றும் பாண்டியன் கிராம வங்கிகள் இணைக்கப்பட்டு, “தமிழ்நாடு கிராம வங்கி” என்ற பெயரில் புதிய வங்கி உருவாக்கப்பட்டுள்ளது. இதன் தலைமையகம் சேலத்தில் அமையவுள்ளது.
  2. நடப்பு நிதியாண்டின், ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலத்தில், வெளிநாட்டு நேரடி முதலீடு (FDI), 11% சரிந்து 66 பில்லியன் டாலராக உள்ளது
  3. ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) அன்னபூர்ணா நிதி நிறுவனத்தின் 14% பங்குகளை வாங்கியது. இதன் மதிப்பு ரூ 580 கோடியாகும்
  4. ஃபிட்ச் குழுமம் வெளியிட்ட அறிக்கையில் நடப்பு நிதியாண்டில்(2019-20) நிதிநிலை பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6 சதவிகிதமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளது
  5. பி.வி. பாரதி(P V Bharathi) கார்ப்பரேஷன் வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரியாக (CEO) பொறுப்பேற்றுள்ளார்
அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
  1. இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு (ISRO) உருவாக்கி உள்ள 40வது தகவல் தொடர்பு செயற்கை கோளான “ஜிசாட் – 31” (GSAT – 31) ஐரோப்பிய ராக்கெட்டான “ஏரியன் – 5” (Ariane – 5, VA247) மூலம் பிரெஞ்சு கயானாவிலிருந்து விண்ணில் செலுத்தப்பட உள்ளது.
விளையாட்டு செய்திகள்
  1. 2019 தாய்லாந்து ஓபன் டென்னிஸ் (2019 Thailand Open Tennis) போட்டியின், மகளிர் ஒற்றையர் பிரிவில் உக்ரைன் வீராங்கனையான டயனா யாஸ்ட்ரிம்ஸ்கா (Dayana Yastremska), ஆஸ்திரேலிய வீராங்கனையான அஜ்லா டோம்ஜானோவிக் தோற்கடித்து (Ajla Tomljanovic) சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.
  2. அமெரிகாவில் நடைபெற்றசெட்டில் ஓபன் போட்டியில்(Seattle Open title) இந்திய ஸ்குவாஷ் வீரர் ரமிட் டான்டன்(Ramit Tandon) எகிப்தின் மொஹமட் எல் ஷெர்பினியை(Mohamed El Sherbini) தோற்கடித்து படத்தை வென்றார்

0 comments:

Post a Comment

Today Govt Job Updates

Banking

Reasoning

Education wise jobs