Government
Jobs
Apply

Today Updates

Saturday, 9 February 2019

Tamil Current Affairs 08-02- 2019

By

நடப்பு நிகழ்வுகள் பிப்ரவரி 08, 2019

உலக செய்திகள்
  1. மாசிடோனிய நேட்டோ இராணுவ கூட்டமைப்பில் 30 வது நாடாக இணைந்துள்ளது
  2. திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய எரிவாயு (LPG) பயன்பாட்டில் உலகின் இரண்டாவது பெரிய நுகர்வோர் மற்றும் இறக்குமதியாளராக இந்தியா திகழ்கிறது. மேலும் சீனா முதலிடத்தில் உள்ளது
தேசிய செய்திகள் 
  1. அசாம் மாநிலம் கௌகாதியில் இரண்டாவது “ஆசியான் – இந்தியா இளைஞர் மாநாட்டை” அம்மாநில முதல்வர் ‘சர்பானந்த சோனோவால்’ தொடங்கி வைத்தார். இம்மாநாட்டின் நோக்கம் "இணைப்பை பகிர்ந்துகொள்வதற்கான செம்மையான பாதை" ஆகும்.
  2. பிரதான் மந்திரி பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 2016 – 17 ஆண்டில் அதிக காப்பீட்டுத் தொகை பெற்ற மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. இத்திட்டத்தின் கீழ் காரிப் பயிர்களுக்கு – 2 சதவிகிதமும், ராபி பயிர்களுக்கு 1.5 சதவிகிதமும் காப்பீட்டுத் தொகையாக வழங்கப்படுகிறது.
  3. அதிக அளவு வெப்பம் பதிவான ஆண்டுகளின் பட்டியலில் 2018ஆம் ஆண்டு 4-வது இடத்தை பிடித்துள்ளது.
  4. ஆந்திராவில் காபு சமூகத்துக்கு 5 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மசோதா அம்மாநில சட்டமன்றத்தில் நிறைவேறியுள்ளது.
  5. சென்னையில் உள்ள ஒருங்கிணைந்த இரயில் பெட்டி தொழிற்சாலையின் பொது மேலாளராக (ICF General Manager) “இராகுல் ஜெயின்” நியமிக்கப்பட்டுள்ளார்.
  6. பிரதான் மந்திரி பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 2016 – 17 ஆண்டில் அதிக காப்பீட்டுத் தொகை பெற்றதில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது.
விளையாட்டு செய்திகள்
  1. உலகக் கோப்பையில் பங்கேற்கவுள்ள ஆஸ்திரேலிய அணிக்கு, துணை பயிற்சியாளராக ரிக்கி பாண்டிங் நியமிக்கப்பட்டுள்ளார்.
  2. டி-20 போட்டிகளில் அதிக ரன்களைக் குவித்தவர் என்னும் சாதனையை இந்திய அணி வீரர் ரோகித் சர்மா நிகழ்த்தியுள்ளார். இவர் நியூசிலாந்து அணியின் மார்ட்டின் கப்திலின் சாதனையை முறியடித்து முதல் இடத்தை பெற்றுள்ளார்.
 
 

0 comments:

Post a Comment

Today Govt Job Updates

Banking

Reasoning

Education wise jobs