Government
Jobs
Apply

Today Updates

Monday, 22 April 2019

daily current affairs in tamil april 21 2019

By

நடப்பு நிகழ்வுகள் ஏப்ரல் 21, 2019



தேசிய செய்திகள் 

1. “ககன்தீப் காங்” என்பவர் இலண்டனில் உள்ள “ராயல் சமூகத்தின் உறுப்பினராக” (FRS – Fellow of the Royal Society) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

2. உலக மக்கள் தொகை அறிக்கையின் படி இந்தியர்களின் சராசரி ஆயிட்கலம் 69 வயது.

3. டைம்ஸ் பத்திரிகை வெளியிட்ட உலகின் செல்வாக்கு மிக்க 100 நபர்களின் பட்டியலில் LGBTQ உரிமை காப்பு வழக்கறிஞர்களான அருந்ததி கட்யூ மற்றும் மேனகா குரூஸ்வாமி ஆகியோர் 9வது இடத்திலும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி 13 வது இடத்திலும் உள்ளனர்

4. இந்தியாவை சேர்ந்த காப்பீட்டு நிறுவனமான சோழமண்டலம் எம்.எஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் (Cholamandalam MS General Insurance Company Limited), டி.யூ.வி இந்தியாவின் ISO 31000: 2018 சான்றிதழை பெற்றுள்ளது.

5. சிப்லா நிறுவனத்தின் தலைவரான யூசுப் ஹாமி (Usuf Hamie) இங்கிலாந்தின் ராயல் சொசைட்டி (UK Royal Society) விருதை பெற்றார்.

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

6. இலங்கையின் முதலாவது செயற்கைகோளான “ராவனா – 1”(Ravana - 1) என்ற செயற்கைகோள் அமெரிக்காவின் நாசாவின் உதவியுடன் ஆண்டாரெஸ் ராக்கெட்வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

7. நேபாளத்தின் முதலாவது செயற்கைகோளான “நேபாலிசட் - 1”(NepaliSat-1) என்ற செயற்கைகோள் அமெரிக்காவின் நாசாவின் உதவியுடன் ஆண்டாரெஸ் ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

விளையாட்டு செய்திகள் 

8. சர்வதேச ஹாக்கி சம்மேளனம் பாக்கிஸ்தானிய ஹாக்கி சம்மேளனம் (PHF) மீது புரோ லீக் கட்டுப்பாடுகளை மதிக்காதத்திற்காக 1,70,000 யூரோ அபராதம் விதித்துள்ளது.

9. சர்வதேச மல்யுத்த சம்மேளனம் வெளியிட்ட சர்வதேச மல்யுத்த தரவரிசை பட்டியலில் 65 Kg Free Style எடை பிரிவில் இந்தியாவை சேர்ந்த பஜ்ரங் புனியா முதலிடத்தில் உள்ளார்

முக்கிய தினங்கள் 

10. ஏப்ரல் 18 - உலக பாரம்பரிய தினம். இதன் கருத்துரு கிராமப்புற நிலப்பரப்புகள் (Rural Landscapes).

0 comments:

Post a Comment

Today Govt Job Updates

Banking

Reasoning

Education wise jobs